சொந்தத் தொகுதியிலேயே கோட்டை விட்ட பழனிச்சாமி..!! எடப்பாடி தொகுதி அதிமுக பிரமுகர்கள் ஓபிஎஸ்.,க்கு ஆதரவு..! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கி வருகிறார். அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் தமிழக முழுவதும் தனக்கு ஆதரவான நிலையில் உள்ளவர்களை பொறுப்பாளர்களாக நியமித்து வருகிறார். அவ்வாறு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுபவர்கள் பெரிய குளத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி பொதுக்குழு நடத்தப் போவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள எடப்பாடி, சங்ககிரி தொகுதியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட சேலம் மேற்கு புறநகர் மாவட்ட செயலாளர் எடப்பாடி ராஜேந்திரன் தலைமையில் 150 க்கும் மேற்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பெரிய குளத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய எடப்பாடி ராஜேந்திரன் "பழனிச்சாமி அதிமுகவை அழிக்கத் துடிக்கிறார். அவர் அதிமுகவை ஒரு சமுதாய கட்சியாக மாற்ற நினைத்து செயல்பட்டு வருகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காக அதிமுகவை தொடங்கினார்களோ அந்த நோக்கத்திற்காகவே பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் ஒன்று சேர தயாராகி வருகின்றனர். 

எடப்பாடி பழனிசாமியின் தவறான அணுகுமுறையால் ஆளும் திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்ட முடியாத நிலையில் அதிமுக உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருவதால் விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் பொதுக்கூட்டத்தை எடப்பாடி தொகுதியில் நடத்த வேண்டும். 

தமிழகம் முழுவதும் மாபெரும் எழுச்சி ஏற்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்" என எடப்பாடி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளதால் பன்னீர்செல்வம் அணியினர் உற்சாகமடைந்துள்ளனர். அதே வேளையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியில் இருந்து முக்கிய பிரமுகர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறியது பழனிச்சாமி அணியினர் இடையே பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS salem district supporters support the OPS team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->