ஓபிஎஸ் இருப்பது விரத்தியின் விளிம்பில்.! விமர்சனங்களுக்கு ஈபிஎஸ் பதிலடி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவின் இவ்வளவு பெரிய மாநாட்டினை ஓபிஎஸ் ஒரு மாதிரி விமர்சனம் செய்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி "ஓ.பன்னீர்செல்வம் விரத்தியின் விளிம்பிற்கு சென்று விட்டார். இவ்வளவு பெரிய மாநாடு என நீங்களே கூறுகிறீர்கள். உங்கள் கேள்வியிலிருந்து அதற்கான பதில் வந்துவிட்டது.

பத்திரிகையாளர்கள் உங்களுக்கு இருக்கும் மனம் கூட அவருக்கு இல்லை" என பதிலடி கொடுத்தார். அப்போது உதயநிதி அதிமுகவுக்கு வரலாறு இல்லாததால் மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெற்றதாக விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அவர் "உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் கலந்து கொண்டு இருந்தால் மாநாடு எவ்வளவு சிறப்பாக நடைபெற்றது என்பதை தெரிந்திருக்கும். பட்டிமன்றம், கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

நானும் சுமார் ஒரு மணி நேரம் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள், இந்த வீடியோ திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள அவல நிலைகள் குறித்து எடுத்து சொல்லி உள்ளேன். அதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் உதய ஸ்டாலின் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளார். 

அவர் அரசியலுக்கு வந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை. கடந்த 1974 ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவில் இணைந்து சுமார் 43 ஆண்டு காலம் நான் கட்சியில் பணியாற்றியுள்ளேன். என்னை போன்றோர்கள் 50 ஆண்டுகள் இந்த கட்சிக்காக பணியாற்றியுள்ளனர்" என உதயநிதியின் விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS response to OPS comments on AIADMK conference


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->