வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு செல்கிறார் ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


குமாரி மற்றும் அதனை ஒட்டி உள்ள வங்கக்கடல் வளிமண்டலத்தின் மேல் நிலவும் சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக தென்தழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின் உடைமைகள் மற்றும் வாழ்நாள் சேமிப்புகள் அடித்து செல்லப்பட்டது. கடந்த 3 நாட்களாக மின்சாரம், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு செல்கிறார். ஏற்கனவே அதிமுக மாவட்ட செயலாளர்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கபட்டு வரும் நிலையில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இண்டியா கூட்டணியின் 3வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக்க டெல்லி சென்றுள்ள இந்த சூழலில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தென்மாவட்டங்களுக்கு செல்வது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS goes to flood affected southern districts


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->