அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வருகின்ற 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல் குரூப், சயின்ஸ் குரூப், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல், வரலாறு போன்ற குரூப்பிற்கு கடுமையான போட்டி நிலவகூடும். 

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவு கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகின்ற 13ஆம் தேதி முதல் தொடங்குவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt schools plus1 students admission


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->