தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குபாராட்டுக்கள்..தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் - தவெக தலைவர் விஜய்!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் கடந்த மே 6ஆம் தேதி 12 வது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதனை தொடர்ந்து இன்று பத்தாவது பொது தேர்வு முடிவுகள் காலை 9:30 மணிக்கு வெளியானது. அதில் ஆண்கள் 88.58 சதவீதமும் பெண்கள் 94.53 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் பொது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு மற்றும் புதுவையில் அண்மையில் நடைபெற்ற பன்னிரண்டாவது மற்றும் பத்தாவது வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

தேர்வில் தோல்வியடைந்த மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி பெற வாழ்த்துக்கள் அனைவரும் தத்தம் உயர் கல்வி இலக்குடன் வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வலம் வர இதயபூர்வமான வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor vijay wishes for 12th and 10th Students


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->