திமுகவிடம் அடிமை சாசனம்.. அந்த கூட்டணி கட்சிகள் காணாமல் போகும்! - போட்டு தாக்கிய ஈபிஎஸ்..!! - Seithipunal
Seithipunal


நெல்லை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று நெல்லை சென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது "ஒவ்வொரு கட்சித் தலைவரும் தன்னுடைய கட்சியை வளர்க்கத் தான் பார்ப்பார்கள். அடுத்த கட்சிகளை வளர்ப்பதற்காக யாரும் கட்சியை நடத்த மாட்டார்கள். 

ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் திமுக மட்டுமே வளர்கிறது. மற்ற கூட்டணி கட்சிகள் அனைத்தும் தேய்ந்து கொண்டே வருகின்றன.

நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருந்து வருகிறது. மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு இதைப்பற்றி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இந்த பிரச்சனைகளில் எதற்காகவது குரல் கொடுத்தார்களா..? 

மக்கள் பாதிக்கக்கூடிய இந்த பிரச்சனைகளை சுட்டிக்காட்டி திமுகவிற்கு எதிராக குரல் கொடுத்தார்களா..? அவர்கள் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். இன்னும் சில நாட்கள் போனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் காணாமல் போய்விடும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS criticism that DMK alliance parties will disappear


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->