அனல் தெறிக்குதே.. அதிமுக வேட்பாளர்கள்‌ யார்? கோதாவில் குதித்த ஈ.பி.எஸ்...!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஓரிரு நாட்கள் தொடங்க உள்ள நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிடுகிறார்.

அதேபோன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிகள் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் உள்ளன தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் நாளை தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என வெள்ளி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இத்தகைய பரபரப்பான சூழலில் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியிட வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஒருபுறம் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS announced Aiadmk candidates tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->