கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு.. ஈபிஎஸ் அடுக்கும் பாய்ண்டுகள்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்பொழுது பேசிய மு.க ஸ்டாலின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுகவினர் சிக்குவது உறுதி என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஏற்கனவே கொடநாடு கொள்ளை கொலை வழக்கில் அதிமுகவினருக்கு தொடர்பு இருந்து வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டி வந்த நிலையில் அந்த வழக்கில் திமுகவினருக்கு தான் தொடர்பு உள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி முன் வைத்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து பேசியதாவது "திமுக அரசு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு என்ன செய்தார்கள் என்றால் ஒன்றும் கிடையாது.

உடனே ஸ்டாலின் கொடநாடு பற்றி பேசுகிறார். கொடநாட்டிற்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும் என்ன சம்மந்தம்..? முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போட பார்க்கிறார். அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை முயற்சி நடைபெற்றது. 

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற கூண்டில் ஏற்றியது அதிமுக அரசு. ஆனால் குற்றவாளிகளுக்கு இன்று கொடநாடு சம்பவம் பற்றி பேசும் ஸ்டாலின் அவர்களின் கட்சியைச் சேர்ந்தவர் தான் ஜாமீன் வாங்கி தந்துள்ளனர்.

குற்றவாளிகளை கண்டுபிடித்தது நாங்கள் ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வாங்கித் தந்தது திமுக. கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கேரளாவில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள். அவர்கள் மீது பல வழக்குகள் கேரள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

அவர்களை கண்டுபிடித்து நாங்கள் சிறையில் அடைத்தால் திமுகவினர் ஜாமீன் வாங்கி தருகிறார்கள். அதுவும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றவாளிகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். 

கொடநாடு கொடநாடு என பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் இங்கு நடக்காது ஸ்டாலின் அவர்களே. திமுக ஆட்சி அமைந்ததும் ஐஜி தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை ஏற்படுத்தினார். அந்த கமிஷன் 90% விசாரணையை முடித்த நிலையில் 750 பக்கம் கொண்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

ஆனால் திடீரென ஸ்டாலின் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளார். எனவே குற்றவாளிகளை கண்டுபிடித்தது அதிமுக அரசு, குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது திமுக அரசு.  ஆக இந்த விவகாரத்தில் ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கிறது. இவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் சம்மந்தம் உள்ளது என மக்கள் சந்தேகப்படுகிறார்கள். குற்றவாளிகள் மீது ஏன் இவ்வளவு அக்கறை? திமுகவைச் சேர்ந்தவர்கள் ஏன் குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற்று தருகிறார்கள்..? எனவே குற்றவாளிகளுக்கும் திமுகவினருக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது விரைவில் அதற்கான விடை கிடைக்கும்" என தேர்தல் பிரச்சாரத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS alleges DMK linked with Kodanad murder case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->