அமலாக்கத்துறை சோதனை; ஒன்றிய அரசின் நடவடிக்கை ஹிட்லரின் சர்வாதிகார போக்கு போன்று உள்ளது; என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு..! 
                                    
                                    
                                   Enforcement Department raid Union government actions resemble Hitler authoritarian tendencies NR Ilango alleges
 
                                 
                               
                                
                                      
                                            அமலாக்கத்துறை சோதனை மூலம் திமுக மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். 
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடந்த அமலாக்கத் துறை சோதனை நடைபெறத்து. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ; அரசியல் உள்நோக்கத்துடன் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. சிறுபான்மையின மக்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுப்பது ஒன்றிய அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரத்தில் முதலமைச்சரின் நடவடிக்கையை ஒன்றிய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை என்றும், முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாமல், அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு ஏவிவிடுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
மேலும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த ஒன்றிய பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்றும், ஒன்றிய அரசின் நடவடிக்கை ஹிட்லரின் சர்வாதிகார போக்கு போன்று உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் குழப்பம் உண்டாக்க அமலாக்கத்துறையை ஏவி விடுவார்கள். ஒன்றிய அரசின் செய்தியாளர்களிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Enforcement Department raid Union government actions resemble Hitler authoritarian tendencies NR Ilango alleges