ஜனநாயக நாயகர்கள் - பொறுப்பான "தருமபுரி" மக்கள்.! மிக மிக மிக மோசமான குடிமக்கள் எந்த மாவட்டம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குத்துமதிப்பாக 60.70 சதவீதம் வாக்கு பதிவு நடந்து உள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்ற நிலையில், வாக்கு பதிவுகளின் குத்துமதிப்பான சதவிகிதத்தை மாவட்ட வாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 

மாநகராட்சி : தமிழகம் முழுவதும் மாநகராட்சியை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 52.2 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

* அதிகபட்சமாக கரூர் மாநகராட்சியில் 75.85 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
* குறைந்தபட்சமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகராட்சியில் 43.59  சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

நகராட்சி : தமிழகம் முழுவதும் நகராட்சியை பொருத்தவரை 68.22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

* அதிகபட்சமாக தருமபுரியில் 81.37% பேர் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.
* குறைந்தபட்சமாக நீலகிரியில் 59.98 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

பேரூராட்சி : தமிழகம் முழுவதும் பேரூராட்சி பொருத்தவரை 74.68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

* அதிகபட்சமாக கரூரில் 86.43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
* குறைந்தபட்சமாக நீலகிரியில் 66.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election poll 2022 dharmapuri


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->