அதிமுக கூட்டணி கட்சி தலைவர் வீட்டில் ரைடு.!! - Seithipunal
Seithipunal


நாளை தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில், வேலூர் மக்களவை தொகுதி நீங்கலாக 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 23 சட்டமன்ற தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கு உண்டான வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

வாக்கு பதிவை முன்னிட்டு, நேற்று மாலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள் பேட்டி கொடுப்பது, பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று இரவு கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் என சோதனை நடத்தினர்.

இந்நிலையில், புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமியின் வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

தட்டான்சாவடியில் உள்ள ரங்கசாமி வீட்டிற்குள் இன்று மதியம் 1.50 மணிக்கு 5 வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நுழைந்தனர். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் அறைகள், மாடியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

அதிமுக தலைமையில கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் தலைவர் வீட்டில் சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission officer raid in puthuvai ex cm house


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal