#BREAKING | மீண்டும் ஒன்றிணைந்த அதிமுக? இரு மாதம் கழித்து அரங்கேறிய சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்றிலிருந்து (ஆகஸ்ட் 1-ம் தேதி) தொடங்குகிறது. 

இந்த பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதற்கென '6 பி' என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், தேர்தல் ஆணைய ஆலோசானை கூட்டத்தில் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அமர்ந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமனும் தேர்தல் ஆணையத்திற்கு வந்தனர்.

இதில், ஜெயக்குமார் வந்ததும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அருகில் இருந்த அதிமுக என்ற பெயர் பலகையை தனது பக்கம் நகர்த்தி வைத்து கொண்டார்.

மொத்தத்தில் ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பின், அதிமுக சார்பாக அருகருகே ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் "ஒன்றாக" அமர்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பு விடாமல் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தங்கள் தான் அதிமுக என்று செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ELECTION COMMINSSION MEET ADMK OPS AND EPS SIDE


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->