என் மகன் தேர்தலில் களமிறங்குவாரா என்பதை பாஜக தலைமை தான் முடிவு எடுக்கும் - முன்னாள் முதல்வர் பேட்டி.!
ediyurappa son in election
கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வைத் தோற்கடித்து, பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற காங்கிரஸ் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை எடியூரப்பா தெரிவித்துள்ளதாவது,
"என்னுடைய சட்டசபைத் தொகுதியை எனது மகன் பி.ஒய்.விஜயேந்திரனுக்காக விட்டுக்கொடுக்கிறேன். அவர் ஷிகாரிபுராவில் போட்டியிடுவார். ஷிகாரிபுரா வாக்காளர்கள் அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.

இதற்கான இறுதி முடிவை பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் எடுப்பார்கள் அவர்களின் முடிவே இறுதியானது. என்னால் அழுத்தம் கொடுக்க முடியாது. பரிந்துரையை மட்டுமே அளிக்க முடியும். கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம்". என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
ediyurappa son in election