விஜய்யை வம்புக்கு இழுத்த எடப்பாடி...! மேகதாது அணைப் பிரச்சினையில் தவெக-வின் நிலைப்பாடு என்ன...? - இபிஎஸ் பகிரங்கக் கேள்வி...!
Edappadi who dragged Vijay ruckus What Tvk stand Mekedadu Dam issue EPS Public Question
எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப் பதிவின் மூலம் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, “மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை” என கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் நீர்வள உரிமையை பறிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதனை தமிழக அரசு மௌனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆட்சி மாறினாலும் தமிழகத்தின் உரிமை தொடர்பான நிலைப்பாடுகளில் மாற்றமின்றி அதே அரசியல் காட்சி தொடர்கிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அரசு, காங்கிரஸ் ஆதரவை சார்ந்த “பொய்க்கால் குதிரை அரசு” போல இயங்கி வருவதால், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக உறுதியான குரல் எழுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் பூமி பூஜை நடத்தும் அளவிற்கு கர்நாடக அரசுக்கு தைரியம் உருவாக காரணம் என்ன? தமிழகத்தில் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தான் செயல்படுகிறது என்ற நம்பிக்கையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து தமிழக நலன்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி என்றும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாய வாழ்வாதாரத்திற்கும், 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாக காவிரி விளங்கி வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவன நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
காவிரி நீர் உரிமை தொடர்பாக தமிழகத்தின் உரிமைகள் எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதனை ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.கர்நாடக துணை முதல்-அமைச்சரின் கருத்துகள் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Edappadi who dragged Vijay ruckus What Tvk stand Mekedadu Dam issue EPS Public Question