வேலை நிறுத்த போராட்டம்; 4 நாட்கள் எஸ்.பி.ஐ. வங்கி சேவை முடங்கும் அபாயம்..! - Seithipunal
Seithipunal


அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சம்மேளனம் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருப்பதாக எஸ்.பி.ஐ. வங்கி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் மே 23 முதல் 26 வரை எஸ்.பி.ஐ வங்கி கிளைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் 25, 26 தேதிகளில் நாடு முழுவதும் ஊதியம், ஊழியர் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளைத் தீர்க்க கோரி SBI வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் மூலம், 23 முதல் 26 வரையில் தொடர்ந்து நான்கு நாட்கள் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகள் இயங்க முடியாத நிலையில் உள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாக நேரிடலாம். மே 23-ஆம் தேதி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதாலும், அடுத்து 24-ஆம் தேதி ஞாயிறு என்பதாலும் வழக்கமான விடுமுறையாக உள்ளது. இதனைத் தொடர்ந்து 25 மற்றும் 26 ஆகிய இரண்டு தேதிகளில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி கிளைகள் தொடர்ந்து நான்கு நாட்கள் செயல்படாத நிலையில், முக்கிய சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை சமாளிக்க, வாடிக்கையாளர்கள் ATM சேவை, மொபைல் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்த எஸ்.பி.ஐ வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தமும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SBI Banking Services at Risk of Disruption for 4 Days


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->