சட்டசபை தேர்தல் சுற்றுப்பயணத்தை ஜூலை 07-ஆம் தேதி கோவையில் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி..! - Seithipunal
Seithipunal


2026 -ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. அரசியல் கட்சிகள்  தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில்,  அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக வரும் ஜூலை 09 முதல் தொகுதி வாரியாக சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

இது தொடர்பாக அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, விரைவில் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அதன்படி, இந்த சுற்றுப்பயணம் குறித்த விவரங்களை அ.தி.மு.க., வெளியிட்டுள்ளது. 


 
' மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற நோக்கத்துடன், முதற்கட்டமாக வரும் ஜூலை 07 முதல் 21 வரை கோவை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பயண விவரம் பின்வருமாறு:

ஜூலை -07 - கோவை புறநகர்

ஜூலை 98 - கோவை மாநகர்

ஜூலை 10 - விழுப்புரம்

ஜூலை 11- விழுப்புரம்

ஜூலை 12 - கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு

ஜூலை 14 - கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, கடலூர் கிழக்கு

ஜூலை 15- மயிலாடுதுறை

ஜூலை 16- திருவாரூர், நாகை

ஜூலை 17 - நாகை, திருவாரூர்

ஜூலை18 - திருவாரூர், தஞ்சாவூர் கிழக்கு

ஜூலை 19 - தஞ்சாவூர் மேற்கு, தஞ்சாவூர் மத்தி, தஞ்சாவூர் மேற்கு

ஜூலை 21- தஞ்சாவூர் மத்தி, தஞ்சாவூர் தெற்கு


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami to begin assembly election tour from Coimbatore on July 7th


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->