நெடுஞ்சாலையில் அரங்கேறிய கொடூரம்: காரில் வைத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பெண்களின் தங்க நகை கொள்ளை..!
Girl sexually assaulted in car on highway in Pune
புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் காரில் வைத்து சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் மூன்று பெண்களும் ஒரு சிறுமியும் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் நெடுஞ்சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
ஓட்டுநர் காரிலிருந்து இறங்கியவுடன், அடையாளம் தெரியாத இரண்டு ஆண்கள் காருக்கு அருகில் வந்து ஆயுதங்களைக் காட்டி உள்ளே இருந்த பெண்களை மிரட்டியுள்ளனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த நகைகளை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர். நகைகளைத் கொள்ளையடித்த பிறகு அந்த நபர்களின் ஒருவன், காரில் இருந்த 17 வயது சிறுமியை பார்த்துள்ளான். அப்போது அவன் அந்த சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதனை தொடர்ந்து பெண்களிடம் கொள்ளையடித்த நகைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
காவல்துறையினரின் அறிக்கையின் படி, இந்த சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை 04:15 மணிக்கு புனே மாவட்டத்தில் உள்ள பிக்வான் அருகே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புனே போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Girl sexually assaulted in car on highway in Pune