இயற்கை பேரிடர் காலங்கள், கொரோனா காலகட்டங்கள், நீர் மேலாண்மை, காவிரி டெல்டா பாதுகாப்பில் அதிமுக அரசே சிறப்பாக செயல்பட்டது: இபிஎஸ் பேச்சு..!
Edappadi Palaniswami says AIADMK alliance will achieve historic victory in the upcoming assembly elections
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். தஞ்சை மாவட்டம் பாமநாசம் பகுதியில் மக்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:
எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு பொன்விழா கண்ட கட்சி அதிமுக, ஜெயலலிதா வழிநடத்திய கட்சி அதிமுக. மக்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கிய கட்சி அதிமுக. புயல், வெள்ள, மழை பாதிப்புகளை புயல் வேகத்தில் சரி செய்தது அதிமுக அரசு என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளித்ததாகவும், அதிமுக ஆட்சியில் தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிர்களை காத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா உள்ளிட்ட சோதனையான காலகட்டங்களிலும் அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்ததாகவும், வேளாண்மைக்கான நீர் மேலாண்மையில் அதிமுக அரசு சிறந்து விளங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காவிரி டெல்டாவை அதிமுக அரசு பாதுகாத்ததாகவும், காவிரி நதிநீர் உரிமையை பெற்றுத்தந்ததும் அதிமுக அரசு என்று கூறியுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில் 07 சட்டக் கல்லூரிகளை கொண்டு வண்டஹ்தாகவும், அதிமுகதான் கல்விக்கு முன்னுரிமை கொடுத்த கட்சி என்று குறிப்பிட்டுள்ளதோடு, வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெறும் என்று மேலும் கூறியுள்ளார்.
English Summary
Edappadi Palaniswami says AIADMK alliance will achieve historic victory in the upcoming assembly elections