'பதில் சொல்லுங்க அப்பா' ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி...!
Edappadi Palaniswami releases Answer Dad report card
புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் 'எடப்பாடி பழனிசாமி'அவர்கள், 'தி.மு.கவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக' என்ற அ.தி.மு.க. வின் புதிய பிரசார திட்டங்களை தொடங்கி வைத்தார். கூடுதலாக ''பதில் சொல்லுங்க அப்பா'' என்ற தலைப்பில் பெண்களின் பாதிப்புகள் குறித்த காணொலியையும் அவர் வெளியிட்டார்.

இதில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளின் உண்மை நிலையை அறிய மக்களுக்கு ரிப்போர்ட் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்களிடம் கொடுக்கப்பட உள்ள ரிப்போர்ட் கார்டையும் வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமி:
அதன் பிறகு நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது," 2026-ல் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது.
நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல. அ.தி.மு.க கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வரவேண்டுமோ அப்போது வரும். கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்.
தி.மு.க.வினர் சென்று பிரதமரின் வீட்டு கதவை தட்டினால் மட்டும் சரியா? என்று தெரிவித்தார்.
English Summary
Edappadi Palaniswami releases Answer Dad report card