மக்களின் செல்வாக்கை இழந்துள்ள திமுக அரசு: கடன் வாங்குவதில் ஸ்டாலின் சூப்பர் முதல்வர்: எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


திமுக அரசு மக்களின் செல்வாக்கை இழந்து விட்டதாகவும், இதனால் தான் விடுபட்ட மகளிருக்கும், விதிகளை தளர்த்தி மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடலூரில் நடந்த பேரணியில் பேசியுள்ளார்.

அத்துடன், அங்கு அவர் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் பெண் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா ஆடு, கோழி, கறவை மாடுகள் வழங்கும் திட்டம், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விட்டது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், எங்கள் மீது கோபம் இருந்தால், எங்களுடன் பேசுங்கள். ஏழை மக்களின் திட்டங்களை ஏன் நிறுத்தினீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதனை மீண்டும் வழங்குவதாகவும், ஏழைகள், மக்கள் பாதிக்கும் போது ஓடோடி வந்த அரசாக அதிமுக அரசு இருந்தது என்று பேசியுள்ளார்.

மேலும், அவர் அங்கு குறிப்பிடுகையில், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக ஸ்டாலின் கூறுகிறார். தேர்தல் நேரத்தில் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என சொல்லிதான் திமுக  ஆட்சிக்கு வந்தது. ஆனால், 28 மாதங்கள் அவை வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பெண்களிடம்  இருந்து எதிர்ப்பு வரும் என்பதாலும், அதிமுக தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆயிரம் ரூபாயை ஸ்டாலின் கொடுத்தார் என்றும், பெண்கள் மீது இரக்கப்பட்டு கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தற்போது விடுபட்டவர்களுக்கு, விதிகளை தளர்த்தி, 30 லட்சம் பெண்களுக்கு ரூ. ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளார். மக்களிடம் இருந்து தி.மு.க.வின் செல்வாக்கு இழந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் எட்டு மாதத்தில் தேர்தல் வருகிற நிலையில், தற்போது 52 மாதங்கள் பிறகு, மாதம் ஆயிரம் வழங்குவோம் நிதி வழங்குவோம் என்று சொல்கிறீர்களே.. ?இது நியாயமா, மக்களை ஏமாற்றுவது இல்லையா..? தேர்தலுக்காக முன்கூட்டியே மாதந்தோறும் நிதி கொடுத்து தந்திரமாக ஓட்டு பெற உள்ளனர். ஆக மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் இ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கடன் வாங்குவதில் ஸ்டாலின் சூப்பர் முதல்வராக உள்ளார் என்றும், ஆயிரம் ரூபாய் தொகையை கூட அரசின் வருமானத்தை அதிகரித்து கொடுக்கவில்லை. கடன் வாங்கி தான் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடன் உங்கள் மீது தான் வந்து விழும் எனவும், ஸ்டாலினுக்கு வருவதற்கு முன்பு, காங்., திமுக, அதிமுக ஆட்சி மாறி மாறி நடந்தது. 

2021-ஆம் ஆண்டு 5 .18 லட்சம் கோடி கடன் இருந்ததாகவும்,  ஸ்டாலின் 04 ஆண்டு கால ஆட்சியில், 4.38 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 2025 -2026 சட்டசபை தேர்தலுக்குள் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காகவா மக்கள் ஆட்சியை ஆட்சி கொடுத்தனர் என்றும், பிறக்கும் குழந்தை மீதும் 1.5 லட்சம் கடன் உள்ளதாகவும், கடன் மேல் கடன் வாங்கி மக்களை தத்தளிக்கவிட்ட அரசு திமுக., அரசு என்று எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami criticizes that the DMK government has lost the influence of the people


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->