சட்டசபை வரலாற்றில் சாதனைப் படைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் நேற்று. கடந்த 22ஆம் தேதி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது பேச வாய்ப்பு அளிக்காததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இதனால், எதிர்க்கட்சியினர் இல்லாமலேயே பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டது. அதிமுக அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தபிறகு பதவி ஏற்கும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுடன் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். 

இதனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக தனது கடைசி உரையாற்றினார். தனது நான்கு ஆண்டுகால ஆட்சியில் துணையாக இருந்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சபாநாயகர் தனபால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சட்டமன்ற வரலாற்றிலேயே அனைத்து நாட்களிலும் பங்கேற்ற ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. 2016 முதல் இன்று வரை சட்டப்பேரவையில் 167 நாட்கள் கூடியுள்ளது. மொத்தம் 858 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. அவையில் உரையாற்ற ஆளும் கட்சிகளை விட எதிர்க்கட்சிகளுக்கு 16 மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy cabinet neeting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->