#BREAKING || செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மீண்டும் ED சோதனை!
ED raids 10 places linked to Senthil Balaji
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் படி சென்னை புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். கடந்த ஜூன் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட 70 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வரும் நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை திறப்பு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது. இந்த நிலையில் தமிழக முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில் முறையில் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 10 இடங்களில் 30க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சென்னை தவிர்த்து பத்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று செந்தில் பாலாஜி வழக்கில் என் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்த அவர்கள் அளித்த தகவலின் பெயரில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்துடன் தொழில்முறையில் தொடர்புடைய நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது
English Summary
ED raids 10 places linked to Senthil Balaji