வெடித்தது உட்கட்சி பூசல்.. "அவரு சின்னப்பையன்".. வைகோவின் பதில் என்ன.? எகிறி அடிக்கும் துரைசாமி..!! - Seithipunal
Seithipunal


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி எழுதிய கடிதத்தில் "நானும் சிலரும் மதிமுகவை உடைக்க நினைப்பதாக குளித்தலையில் நீங்கள் பேசி உள்ளீர்கள். மதிமுக துவங்கப்பட்ட போது வாரிசு அரசுக்கு எதிரான தங்களது பேச்சை உண்மையான நம்பி தோழர்கள் ஏமாந்து போய் உள்ளனர். 

தங்களின் குழப்பமான அரசியல் நிலைப்பாட்டால் திமுகவிலிருந்து மதிமுகவிற்கு வந்தவர்கள் மீண்டும் திமுகவுக்கு சென்று விட்டனர். தங்களின் சந்தர்ப்பவாத சுயநல அரசியலால் மதிமுகவின் பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக் கொள்ள முன்வரவில்லை. நீங்கள் உங்களின் குடும்ப மறுமலர்ச்சிக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எனவே மதிமுகவை தாய் கட்சியான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது" என வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு வைகோவின் மகன் துரை வைகோ "மதிமுகவை திமுகவுடன் இணைப்பது குறித்து திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை மதிமுக தொண்டர்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும். பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியதை துரைசாமி பொதுவெளியில் தெரிவிப்பது முறையல்ல. 

ஜனநாயக முறைப்படி அவை தலைவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவருடைய கருத்து குறித்து கட்சியின் பொதுக்குழு தான் முடிவு செய்யும். சிலரின் தூண்டுதலின் பேரில் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்" என துரை வைகோ விமர்சனம் செய்துள்ளார்.

துரை வைகோவின் விமர்சனத்திற்கு திருப்பூர் துரைசாமி "வைகோவின் மகன் துரை வைகோ சின்னப்பையன். அவருக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. எனது கடிதம் தொடர்பாக வைகோவின் பதிலுக்காக காத்திருக்கிறேன்" என பதிலடி தந்துள்ளார்.

இந்த நிலையில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தனது ஆதரவாளருடன் திடீரென ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி பூசல் துவங்கி உள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Duraiswamy response to Durai Vaiko comments


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->