இந்த தகுதி போதும்... "என் மகன் நாடாளுமன்றம் செல்வான்".. அடித்து சொன்ன துரைமுருகன்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கங்க வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு போக மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 

அதன்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்தமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். 

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன் ஏவா வேலு உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் தான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் எனவும் அந்த வகையில் தங்கள் வேட்பாளர் கதிரானந்த் தகுதியானவர் தான் எனவும் கூறியுள்ளார். கதிர் ஆனந்தை எதிர்த்து அரசு மருத்துவராக பணியாற்றிய பசுபதியை அதிமுக களமிறக்கி உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Duraimurugan said KarthirAnand definitely going to parliament as MP


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->