ஓபிஎஸ், பிரேமலதா முதலமைச்சரை சந்தித்ததன் நோக்கம் குறித்த சுவாரஸ்யமான முடிச்சை அவீழ்த்த துரைமுருகன்...!
Durai Murugan reveals interesting clue about purpose OPS and Premalatha meeting Chief Minister
நீர்வளத்துறை அமைச்சர் 'துரைமுருகன்' அவர்கள், வேலூர் காட்பாடியடுத்த வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற ''நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்'' தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பு திட்ட முகாமை ஆரம்பித்து வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்கள் முன் வைத்த கேள்விக்கு பதிலளித்த தகவலாவது,"பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்தனர். இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா? இதன் பின்னணி ஏதேனும் உள்ளதா? என்ற கேளிவிக்கு,"பின்னணியும் இல்லை, முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்" என்றார்.
பின்னர், பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே? என்ற கேள்விக்கு ,"அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நம்ம ஊருக்கு வந்திருக்க மாட்டார்கள். இங்க வந்திருக்கிறார்கள் இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனை. ஏனென்றால் பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் அவர்கள் இல்லை என குறிப்பிட்டு விட்டார்கள்.
அந்த மாதிரி நம் ஊரில் போட முடியாது. இதை தலைவர்கள் தான் துரிதமாக அணுக வேண்டும். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பு தாக்கமும் இருக்கும்" என்று தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக மேடையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்கையில்,"மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு முகாம்களை முதல்வர் நடத்தி வருகிறார். இப்போதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது, அது முடிவதற்குள்ளேயே இன்னொரு மக்கள் நலன் சார்ந்த முகாமை முதல்வர் தொடங்கியுள்ளார்.
என்னால் இப்போதைக்கு அதிகமாக பேச முடியாது ஏனென்றால் எனக்கு சற்று உடல் நலம் சரியில்லை" என்று தெரிவித்து விட்டு பேச்சை முடித்துக்கொண்டார்.
English Summary
Durai Murugan reveals interesting clue about purpose OPS and Premalatha meeting Chief Minister