#BREAKING || ஒரே மேடையில் ஓபிஎஸ், இபிஎஸ்.... ஒன்று சேர்க்குமா பாஜக?!  - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். 

ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர். 

கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை அவமதிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நடந்து கொண்டனர். ஓபிஎஸ் மேடையில் அமர்ந்திருக்கும் போது அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவான பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். 

பொதுக்குழு ஒரு தலைப்பட்சமாக நடைபெறுவதாக கூறி ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். மேலும், கட்சி தலைமையை தக்க வைத்துக் கொள்ளவும், கட்சியில் தன் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கிலும் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னை வந்துள்ளார்.

தனியார் ஓட்டல் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிகள், எம்எல்ஏக்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார். 

இந்த சிறப்பு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருமே கலந்து கொண்டுள்ளனர். தற்போது தனித்தனி அறையில் தங்கியுள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒரே மேடையில் அமர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DraupadiMurmu BJP OPS EPS


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->