அதிமுக கூட்டத்தில் அதிரடி திருப்பம்! எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த ஜெயக்குமார்...! - பின்னணி என்ன...?
dramatic twist AIADMK meeting Jayakumar boycotted meeting led by Edappadi Palaniswami What background
அ.தி.மு.க.வில் உள்கட்சிப் போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகிக்கும் அணியும் தனித்தனியாக ஆதரவை பலப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் உள்ள 82 மாவட்ட செயலாளர்களில் எத்தனை பேர் நேரடியாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கலந்து கொண்டனர் என்ற அதிகாரப்பூர்வ விபரம் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.மறுபுறம், எஸ்.பி.வேலுமணி அணிக்கு 50-க்கும் அதிகமான மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருப்பதாக அந்த அணியினர் ஏற்கனவே தெரிவித்து வந்துள்ளனர்.
குறிப்பாக எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆதரவு தரப்பை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் யாரும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னையை சேர்ந்த முக்கிய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இதுவரை எடப்பாடி பழனிசாமி அணிக்கும், எஸ்.பி.வேலுமணி அணிக்கும் வெளிப்படையான ஆதரவை அறிவிக்காமல் இருந்து வரும் ஜெயக்குமார், எந்த அணிக்குச் சாய்வு காட்டுவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்காத குழப்பநிலையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
dramatic twist AIADMK meeting Jayakumar boycotted meeting led by Edappadi Palaniswami What background