அதிரடி அரசியல் ட்விஸ்ட்…! மாநிலங்களவை போட்டிக்காக எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார்...! - Seithipunal
Seithipunal


பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராகவும், நீண்டகால முதல்-மந்திரியாகவும் விளங்கி வரும் நிதிஷ் குமார், அரசியல் மேடையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் நோக்கில், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த முடிவுக்கு கட்சியின் உள்ளக வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. “நீங்கள் பதவியில் தொடர வேண்டும்” என தொண்டர்களும், மூத்த நிர்வாகிகளும் வலியுறுத்தியதால் அரசியல் சூழல் மேலும் பரபரப்பானது. இந்நிலையில், முதல்-மந்திரி பதவியை விலக்காமல், தனது எம்.எல்.சி. பதவியை இன்று நிதிஷ் குமார் ராஜினாமா செய்து புதிய அரசியல் கணக்குகளை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக அவர் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அப்போது, கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஜா, “32 ஆண்டுகளாக கட்சியை உறுதியான அடித்தளத்தில் கட்டியமைத்தவர் நிதிஷ் குமார்” என பாராட்டியிருந்தார்.

பீகார் அரசியலில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்ற தனித்துவமான சாதனையை பெற்றுள்ள நிதிஷ் குமார், கடந்த ஆண்டு நவம்பரில் 10வது முறையாக அந்த பொறுப்பை ஏற்றிருந்தார்.

தற்போது மாநிலங்களவை தேர்தலில் களம் இறங்கும் நிலையில், அவரது அடுத்த கட்ட அரசியல் முடிவுகள் குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதனிடையே, அவரது குடும்ப அரசியல் வருகைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக பேசப்படுகிறது. குறிப்பாக, அவரது மகனுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி, புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dramatic political twist Nitish Kumar resigns from his MLC post contest Rajya Sabha


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->