தந்தையரின் தியாகத்தை போற்றுவோம் - மருத்துவர் இராமதாஸ் வாழ்த்துச் செய்தி.!
Dr Ramadoss Wish World Fathers Day
இன்று உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
"குழந்தைகளின் முதல் ஆசிரியர்; பிள்ளைகளின் முதல் கதாநாயகன் ; பிள்ளைகளின் வெற்றியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் கொண்டாடும் குழந்தை தான் தந்தை. நீங்கள் குழந்தையாக இருந்த போது தந்தை காட்டிய அன்பையும் பரிவையும் நீங்கள் தந்தையான பின் பெற்றோருக்கு திருப்பிக் கொடுங்கள்!
தந்தையரின் அன்புக் கடனை அடையுங்கள் உலக தந்தையர் நாள் வாழ்த்து" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "உலக தந்தையர் நாள் இன்று. அன்பின் உறைவிடம் அன்னை என்றால், தியாகத்தின் திருவுருவம் தந்தை. பிள்ளைகளின் வாழ்வில் ஒளி பரவ வேண்டும் என்பதற்காக தன்னை வருத்திக் கொள்ளும் மெழுகுவர்த்திகள் தந்தையர்கள் தான்.
தந்தையரை போற்றுவதே பிள்ளையரின் முதல் கடமையாகட்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Wish World Fathers Day