அண்ணாவின் மது விலக்கு உறுதியும்., தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும்.! ஒரு வருடம் கழித்து வைரல் ஆகும் மருத்துவர் இராமதாஸின் போஸ்ட்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பதிவு தற்போது வைரல் ஆகிக்கொண்டு இருக்கிறது. அந்த பதிவின் விவரம் வருமாறு :

அண்ணாவின் மது விலக்கு உறுதியும்., தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும்., அன்று அண்ணா - மதுவை தடுத்த வரலாறு!

"தமிழ்நாட்டில் 1948-ஆம் ஆண்டு முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறையில் இருந்து வந்தது. 1967-ஆம் ஆண்டில் அண்ணா தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. அப்போது கடுமையான நிதி நெருக்கடி நிலவியது. நிலைமையை சமாளிக்க மதுக்கடைகளை திறக்கலாம் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். 

ஆனால், அதை ஏற்க அண்ணா மறுத்து விட்டார். ’’அரசின் வருமானத்திற்காக மது விலக்கை ரத்துச் செய்வது மூட்டைப் பூச்சிக்கு பயந்து  வீட்டை கொளுத்துவதற்கு ஒப்பானது!” என்று கூறினார். அதுமட்டுமின்றி, “மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்” என்றும் கூறி மதுவிலக்குக் கொள்கையில் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

மதுவிலக்கு இல்லாவிட்டால், நிலைகுலைந்து தள்ளாடும் நபர்களை பார்க்க நேரிடும். இப்போது அது இல்லை. இந்த நிலையை நான் வரவேற்கிறேன். இன்று எத்தனையோ குடும்பங்களின் மகிழ்ச்சிக்கு, தாய்மார்களின் மகிழ்ச்சிக்கு மதுவிலக்கே காரணம்’ என்று கூறி மதுக்கடைகளை திறக்கும் யோசனையை அண்ணா நிராகரித்தார்.

இன்று -  மதுவுக்கு சாமரம்

அண்ணாவுக்குப் பிறகு  ஆட்சிக்கு வந்த கலைஞர் 1971-ஆம் ஆண்டில் மதுக்கடைகளை  திறந்தார்.  அதுமட்டுமின்றி 2006 -11 ஆட்சிக் காலத்தில்  5 புதிய மது ஆலைகளுக்கு  அனுமதி அளித்தார். தமிழ்நாட்டில் இப்போது செயல்பாட்டில் உள்ள 11 மது ஆலைகளில் 7 மது ஆலைகள் திமுகவுக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது" என்று அந்த பதிவில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மருத்துவர் இராமதாஸின் இந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதிவிட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Say About DMK CN Anna


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->