#தமிழகம் || பாலியல் வன்கொடுமை, 7 வயது சிறுமி தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூரம் - கொந்தளிப்பில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


பாலியல் வன்கொடுமைக்கு மறுத்ததால் 7 வயது சிறுமி தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூரம்: குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் தேவை என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தேனி மாவட்டம் எரசக்கநாயனூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஒருவன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை தீயிட்டு எரித்துள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி 65% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள். இக்கொடிய நிகழ்வு கண்டிக்கத்தக்கது.

சிறுமியை சிதைக்க முயன்ற கொடியவன் கஞ்சா போதையில் இருந்துள்ளான். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றங்களுக்கான தண்டனை குறித்த அச்சம் இல்லாதது தான் குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் ஆகும்!

பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியம். அதற்கு போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் கட்டாயம்.  ஆனால், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மட்டுமே போக்சோ நீதிமன்றங்கள் உள்ளன. இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

தமிழ்நாட்டில் போக்சோ சட்டப்படி தொடரப்பட்ட 14,380 வழக்குகளில் 7187 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களைத் தொடங்க வேண்டும். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும்" என்பர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Theni Incident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->