இதைவிட ஒரு கொடூரம் இல்லை., சென்னையில் நேற்று நடந்த சம்பவம்., தமிழக அரசை எச்சரிக்கும் Dr. அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


குடியைக் கெடுக்கும் குடி: தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, 

"சென்னையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் காவலர் விஜயகுமார் என்பவர் குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.  காயம்பட்ட இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர்!

குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு இதை விட கொடுமையான எடுத்துக்காட்டு எதுவும் இல்லை. இது முதல் உதாரணமும் இல்லை... கடைசி உதாரணமும் இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊரிலும் அரசே விற்கும் மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிகின்றன; ஏராளமான இளம்பெண்கள் கைம்பெண்களாக்கப்படுகின்றனர்; குழந்தைகள் ஆதரவற்றவர்களாகின்றனர்.

இத்தகைய நிலை இனியும் தொடர்வதை அரசு அனுமதிக்கக்கூடாது. அரசின் கஜானாக்கள் ’தொழுநோயாளிகளின் கைகளில் உள்ள வெண்ணெய்’களால் நிரப்பப்படக்கூடாது. அதனால், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About tasmac shop close issue feb 25


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->