இந்தியாவில் ஆண்டுக்கு 24 லட்சம் பேர் உயிரிழப்பு : வெளியான அதிர்ச்சி காரணம் - மத்திய, மாநில அரசுகளுக்கு Dr. அன்புமணி இராமதாஸ் விடுக்கும் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஆண்டுக்கு 24 லட்சம் பேர் உயிரிழப்பு: மாசுக்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "2019-ஆம் ஆண்டில் அனைத்து வகை மாசுக்களால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சம்; இவர்களில் காற்று மாசுக்கு பலியானவர்கள் மட்டும் 17 லட்சம் பேர் என்று லான்செட் ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த புள்ளிவிவரம்  அதிர்ச்சியளிக்கிறது!

உலக அளவில் மாசுக்களால் உயிரிழந்த 90 லட்சம் பேரில்  27 %  இந்தியர்கள் என்பதிலிருந்தே  இந்தியா எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதை  உணரலாம். தொழில் வளர்ச்சிக்காக மனித உயிர்களை இழப்பதில் தவறில்லை என்ற எண்ணமே இந்த நிலைக்கு காரணம் ஆகும். இது மிகவும் ஆபத்தானது!

பொருளாதாரம் ஈட்டுவதற்காகத்தான் காற்றையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகிறோம். ஆனால், மாசுக்களால் 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்பின் மதிப்பு ரூ. 2.73 லட்சம் கோடி (1% of India's GDP) ஆகும். ஆக எதையும் பெறாமலேயே  நிறைய இழக்கிறோம்!

காற்று மாசு, சுற்றுச்சூழல் மாசு பாதிப்பில் தமிழகமும் முன்னணியில் உள்ளது. எனவே, மக்களைக் காப்பாற்றுவதற்காக  காற்று மாசு உள்ளிட்ட அனைத்து மாசுக்களையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Anbumani Ramadoss Say About Pollution death hike


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->