பலியான 100 தமிழர்களின் உயிருக்கு மதிப்பு இல்லையா? கொந்தளித்த அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது, "ஆன்லைன் சூதாட்டத்திற்காக மருத்துவர் அய்யா போராடவில்லை என்றால் அதற்கான தடை சட்டமே  வந்திருக்காது.

இப்போது மட்டுமல்ல கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும்  தான் சொல்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் போராடி, பலமுறை அழுத்தம் கொடுத்து தான் அப்போது சட்டம் கொண்டு வந்தார்கள்.

அதை நீதிமன்றத்தால் ரத்து செய்தார்கள். தற்போது மீண்டும் போராடி, போராடி தான் அந்த சட்டத்தை மீண்டும் தமிழக அரசு கொண்டு வந்தது. முதலில் அவசர சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து போட்டார். இப்போது பார்த்தால் சட்ட மசோதாவிற்கு கையெழுத்து போட மாட்டுகிறார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மொத்தமாக 100 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளார்கள். மனித உயிர்கள் மீது உங்களுக்கு மரியாதை இல்லையா? அதுவும் 100 தமிழனின் உயிர்., ஆளுநர் கையெழுத்திடாத இந்த காலகட்டத்தில் ஒன்பது பேர் தற்கொலை செய்துள்ளார்கள்.

தமிழக ஆளுநருக்கு உணர்வே கிடையாதா? உயிர் போனால் போகட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? என்ன காரணத்திற்காக கோப்புகளை வைத்துள்ளார். ஒன்று கோப்புகளை திருப்பி அனுப்புங்கள். மாற்றி திருத்தி கொடுப்பார்கள். ஏற்கனவே நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் பதிலளித்து விட்டார்.

இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நாசமாகி கொண்டிருக்கின்றன.

இந்த ஒவ்வொரு நாளும் தாமதம் ஆவதற்கு இந்த ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் ஒரு நாளைக்கு தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வருவாய் கிடக்கட்டும், மனித உயிர்கள் பறிபோய்க்கின்றன." என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Online rummy Ban 3012


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->