பெரும் மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! தமிழக அரசுக்கு மேலும் ஒரு கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு வரவேற்கத்தக்கது : இதனை நீட்டிக்க வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி நேர நிகழ்வுகள் நேரடியாக வலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. 

அவை நடவடிக்கைகளை எந்த தணிக்கையும் இல்லாமல் மக்கள் நேரடியாக அறிந்து கொள்வது மக்களின் ஜனநாயக உரிமை என்ற வகையில் இதை பா.ம.க. வரவேற்கிறது.

சட்டப்பேரவை ஆண்டுக்கு  4 முறை மொத்தம் குறைந்தது 100 நாட்கள் நடைபெற வேண்டும்; அவை நடவடிக்கைகள் முழுமையாக நேரடியாக ஒளிபரப்பட வேண்டும் என்று முதன்முதலில் வாக்குறுதி அளித்ததும், வலியுறுத்தியதும் பா.ம.க. தான். அந்த வகையில் கேள்வி  நேர நேரலை மகிழ்ச்சியளிக்கிறது.

பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்யவும், அதற்காக தனித் தொலைக்காட்சி தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா அச்சம் விலகிய பிறகு பேரவையை ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss happy For TNAssembly Live


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->