உதவித்தொகை குறித்த சந்தேகங்களுக்கு முகங்களில் தீர்வு கிடைக்கும்! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Doubts regarding scholarships resolved person Chief Minister MK Stalin
கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிதம்பரம் லால்புரத்தில் ஐயா எல்.இளையபெருமாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது," வரலாற்று சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. காமராஜர் பிறந்தநாளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்தவர் இளைய பெருமாள். அவரின் அரங்கத்தை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன் 2021-ல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் முன்னெடுப்பு மூலம் மக்களிடம் பெற்ற மனுவுக்கு 100 நாளில் தீர்வு என உறுதி தந்தேன். சொன்னதை போல் தீர்வு தந்ததால் மேலும் பலர் மனு அளிக்க தொடங்கியதால் முதல்வரின் முகவரி என தனிதுறை உருவாக்கப்பட்டது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 5000 முகாம் நடத்தி தீர்வுகள் கண்டோம். தற்போது 46 சேவைக்கு தீர்வு காணும் 10,000 முகாம்களை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தொடங்கி வைத்துள்ளேன். மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அரசின் சேவையை வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் இலக்கு.
தகுதி இருந்தும் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் உங்கள் பகுதியில் நடக்கும் முகாமில் விண்ணப்பங்கள் கொடுங்கள். நிச்சயமாக மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் " என்று தெரிவித்தார்.
English Summary
Doubts regarding scholarships resolved person Chief Minister MK Stalin