உடனே விமர்சிக்காதீங்க...விஜய்க்கு டைம் கொடுங்க...! - முதல்வர் விஜய்க்காக குரல் கொடுத்த பிரேமலதா...!
Dont criticize immediately give Vijay time Premalatha who spoke up Chief Minister Vijay
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் விருத்தாசலம் தொகுதியில் களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த் வெற்றிக்கொடி நாட்டி சட்டப்பேரவைக்கு தேர்வாகியிருந்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அவர் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்த பிரேமலதா, முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்யையும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்தார்.

இந்த காட்சி அவையரங்கில் கவனத்தை ஈர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது"இன்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளேன்.
என்னை வெற்றி பெறச் செய்த விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி தலைவர் ஸ்டாலினுக்கும், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்திற்கு சமர்ப்பிக்கிறேன்.விருத்தாசலம் மக்களிடம் நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற உறுதியாக செயல்படுவேன். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே எனது முதல் கடமை.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். புதிய பொறுப்பை ஏற்றுள்ள அவருக்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
அதற்குப் பிறகு மக்களின் பிரச்சினைகள், தமிழகத்தின் உரிமைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை சட்டப்பேரவையில் வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தார்.
English Summary
Dont criticize immediately give Vijay time Premalatha who spoke up Chief Minister Vijay