அதிக சீட் கேட்டு மோத வேண்டாம்..குடுக்கறத வாங்கிட்டு திமுகவுடன் இணக்கமாக போங்க.. உத்தரவிட்ட ராகுல்? அதிர்ச்சியில் விஜய்?
Donot fight for more seats Buy a drink and go in harmony with DMK Rahul ordered Vijay in shock
பீகார் தேர்தல் முடிவுகள், இந்திய அரசியல் சூழ்நிலையை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் கூட்டணி அரசியலிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் நடக்கும் தொகுதிப்பங்கீடு பேசுவார்த்தையைப் பற்றி புதிய அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகாரில் நிதிஷ் குமார்–பாஜக கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி மிகச் சிறிய அளவிலேயே வெற்றி பெற்றது. 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது. கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணி மொத்தம் 35 இடங்களையே பெற்றது. காங்கிரஸின் பலவீனம் கூட்டணியின் செயல்திறனையும் பாதித்ததாக ஆர்ஜேடி வட்டாரங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன.
இந்த நிலைமையே, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் திமுகவிடம் வைக்கும் கோரிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்க வேண்டாம், திமுகவுடன் அனுசரணையாகவும் சமரசத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை மிகுந்த கவனத்துடன் நடத்த உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸின் நிலை, அமைப்பு பலம் மற்றும் தேர்தல் முக்கியத்துவத்தைப் பாதுகாக்க திமுகவுடன் உள்ள கூட்டணி தொடருதல் அவசியம் என தலைமைக் குழு கருதுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் ஐவர் குழுவை அமைத்து, டிசம்பர் 3 அன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்கத் தீர்மானித்துள்ளது. இந்தக் குழுவில் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, கே. செல்வப்பெருந்தகை, எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆலோசனைகள் 2024 மக்களவைத் தேர்தலில் நடந்த முறையைப் போலவே நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இந்த மாற்றம், திமுக–காங்கிரஸ் கூட்டணியை உறுதியாக வைப்பதை நோக்கமாகக் கொண்டது. மோதலை விட ஒத்துழைப்பே பலன் தரும் என்ற நம்பிக்கை டெல்லி தலைமைக்குள் வலுப்பெற்றுள்ளது.
இதனால், காங்கிரஸ்–TVK கூட்டணி அமையும் வாய்ப்பு குறைந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க விரும்பிய நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை திமுகவுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு இது தொடர்பான முயற்சிகளை முற்றிலுமாக பாதித்துள்ளது.
பீகார் தேர்தல் விளைவுகள், தமிழ்நாட்டு கூட்டணி அரசியலின் சமநிலையையே மாற்றி அமைக்கும் வகையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Donot fight for more seats Buy a drink and go in harmony with DMK Rahul ordered Vijay in shock