அமலா பாலுக்கு அன்னைக்கே பால் ஊத்திருப்பாங்க.. !மைனா பட பேருந்து விபத்து சம்பவத்தை பகிர்ந்த தம்பி ராமையா!
Amala would have given milk to her mother Brother Ramaiah shared the bus accident incident in the film Myna
நடிகை அமலா பால் தற்போது திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக அமைதியான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ள நிலையில், அவர் நடித்த மைனா திரைப்படம் வெளியானது 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினர் ஒருங்கிணைந்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அமலா பால், அந்த படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரம் குறித்து விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், பிரபு சாலமன் இயக்கத்தில் 2010இல் வெளியான மைனா படம், அவரது நடிப்புத் திறமை குறித்து இருந்த அனைத்து கருத்துகளையும் முறியடித்தது. இந்த படம் மூலம் அமலா பால் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்ததோடு, தெலுங்கு சினிமாவிலும் முக்கிய வாய்ப்புகளைப் பெற்றார்.
அதன் பின் தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த அவர், அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் இணைந்து வாழ்ந்த பின், இருவரும் விவாகரத்து பெற்றனர். பின்னர் அமலா பால் ஜகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார்; இலை என்ற மகனுடன் தற்போது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகிறார்.
மைனா படம் வெளியானது 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அமலா பால், விதார்த், பிரபு சாலமன், தம்பி ராமையா, டி. இமான் உள்ளிட்டோர் ஒன்றாக பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் படப்பிடிப்பின் அபாயகரமான அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
இயக்குநர் பிரபு சாலமன், படத்தில் இடம்பெற்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழும் காட்சி முழுவதும் ரியலாக எடுக்கப்பட்டதாகவும், மூணாரில் உள்ள பள்ளத்தில் பேருந்தின் பாதியை செட் அமைத்து, இரண்டு கிரேன்களின் உதவியால் அந்த காட்சியை வடிவமைத்ததாகவும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசும் தம்பி ராமையா, அந்த காட்சியின் போது நடந்த அதிர்ச்சிப் அனுபவத்தை பகிர்ந்தார். அவர் கூறுகையில்:
“அமலா பால், விதார்த்துக்கு பிடித்துக்கொள்ள ஏதாவது இருந்தது. ஆனா எனக்கு ஒன்றும் இல்லை. அங்கிருந்த ஃபைட்டர்ஸ்கூட ‘சார் நாங்களே இதுக்கு ஒத்துக்கொமாட்டோம்; நீங்க இயக்குநரிடம் சொல்லுங்க’ என்று சொன்னார்கள். அந்த சீன் எடுத்து முடித்து இறங்கிய ஐந்தே நிமிடத்தில் பேருந்து நிஜமாகவே பள்ளத்தில் விழுந்தது. அது ஐந்து நிமிஷம் முன்னாடி விழுந்திருந்தா, “அமலாவுக்கு அன்னைக்கே பால்தான்”ன்னு சொல்லியிருப்போம்,” என்று நகைச்சுவையாக கூறிய போது அருகில் இருந்தவர்கள் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இந்த பேட்டியில் வெளிவந்த இந்த அபாயகரமான அனுபவம் சமூக ஊடகங்களில் வைரலாகி, மைனா படக்குழுவின் பாராட்டத்திற்குரிய முயற்சிகள் மீண்டும் பேசப்படும் வகையில் உள்ளது.
English Summary
Amala would have given milk to her mother Brother Ramaiah shared the bus accident incident in the film Myna