நம்பிக்கை குறைவு; அமெரிக்காவிடமிருந்து தங்க கட்டிகளை மீட்கும் முயற்சியில் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள்..!
European nations including Germany are making efforts to reclaim their gold bullion from the United States
1950-களில் நிலவிய சோவியத் யூனியன் அச்சம் காரணமாக, பல ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்காகத் அளவு 6300 டன் வரை இருக்கும் தங்கத்தை அமெரிக்காவில் இருப்பு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றங்கள் உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அத்துடன், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்பாடுகள் காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிலும், உலகின் இரண்டாவது பெரிய தங்க இருப்பைக் கொண்டுள்ள ஜெர்மனி, அமெரிக்காவில் சேமித்து வைத்துள்ள தனது 1,236 டன் தங்கத்தை திரும்பப் பெற விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில், ஈரானுக்கு எதிரான போரில் தங்களுக்கு ஆதரவு அளிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் அச்சுறுத்துவதாக ஐரோப்பிய பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக, டொனால்ட் டிரம்பின் கணிக்க முடியாத சுங்க வரி கொள்கைகள், கிரீன்லாந்தை இணைப்பது தொடர்பான அச்சுறுத்தல்கள் மற்றும் ஈரானுடனான போர் நெருக்கடி போன்றவை ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் இருப்பில் வைத்துள்ள தங்களது தங்கத்தை மீட்டு கொண்டுவருவதற்கு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த தகவல்களை ஐரோப்பிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
European nations including Germany are making efforts to reclaim their gold bullion from the United States