'சொந்த அப்பாவையே கைதிபோல வைத்திருந்தவர், நாட்டு மக்களை என்ன பாடுபடுத்துவார்'; ஆர்.ராசாவின் ஆடியோவை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ள இபிஎஸ்..! - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் அனல்பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருவதோடு, மற்ற கட்சியை குறித்து பகிரங்கமாக விமர்சித்தும் வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்பி ஆ.ராசா பேசியதாக சமூகவலைதளங்களில் வலம்வரும் ஆடியோ குறித்து கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அதாவது, 'ஒரு ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருது. அதில் என்ன பேசியிருக்குனு நான் இங்கே வெளிப்படுத்துகிறேன். அது யார் பேசியது என்று உங்களுக்கெல்லாம் தெரியும், யாரு ஆ.ராசா. அவர் பேசிய ஆடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்தஆடியோவில் திமுகவினர் கனிமொழிக்கு காட்டிய அக்கறையை ஆ.ராசாவுக்கு காட்டவில்லை என்றும், கனிமொழி கைதாகும் வரை ஆ.ராசாவை கட்சியினர் யாரும் எட்டிப்பார்க்கவில்லை என ஆதங்கப்படுகிறார். அதில் அவர் சொல்றார், சமூக நீதிப்பேசும் திமுகவில் சாதிய பாகுபாடு இருப்பதாக அப்பட்டமாக ஒப்புக்கொள்கிறார். கலைஞர் டிவிக்கு பணம் சென்றதை ஆ.ராசா ஒப்புக்கொள்கிறார் என்பதை சுட்டிக்காட்டி பேசினார்.

அத்துடன், ''கலைஞரின் இறுதிக் காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியை போலத்தான் வைத்திருந்தார். ஸ்டாலின் கட்சியை கைப்பற்றிவிட்டார் என்கிறார் ராசா. எவ்ளோ மோசம், இதை யார் சொல்கிறார் என்றால் திமுகவில் இருக்கும் எம்பி, முன்னாள் மத்திய அமைச்சர் சொல்கிறார்.'' என்று அந்த ஆடியோவில் உள்ளதை பரப்புரையில் குறிப்பிட்டார்.

மேலும், திரு ஸ்டாலின் அவர்களுடைய அப்பா கலைஞரை இறுதிக்காலத்தில் கைதியை போல வைத்திருந்தார் என்று திரு ராசா பேசிய ஆடியோவில் சொல்லப்பட்டுள்ளதையும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார்.

அத்தோடு, ''கலைஞரின் இறுதிக்காலத்தில் ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அதன் காரணமாகவே கனிமொழிக்கு சட்டமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை, கனிமொழியை ஒருநாளும் ஸ்டாலின் நம்பமாட்டார்'' என்று கூறுவதையும் பரப்புரையில் இபிஎஸ் அம்பலப்படுத்தியுள்ளார்.

மேலும், ராசா அவர்களின் ஆடியோவில் ''என்னை எப்போதும் கட்சியிலிருந்து வெளியே தள்ள முடியாது, என் செல்வாக்கு, என் கம்யூனிட்டி, என் அறிவு என்று எதையும் வெளியே தள்ள முடியாது என்று'' பேசி இருப்பார் அத்தனையும் சுட்டிக்காட்டி பேசிய பழனிசாமி,
இதைவைத்து பார்த்தால் ஸ்டாலின் அவருடைய அப்பாவை கைதியை போலவே வைத்திருந்துள்ளார். சொந்த அப்பாவையே அப்படி வைத்திருந்தவர், நாட்டு மக்களை என்ன பாடுபடுத்துவார் என்று மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS Criticizes M.K. Stalin Citing R Rajas Audio Clip


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->