சிவகார்த்திகேயனின் மனம் தொட்ட வார்த்தைகள்...! - உணர்ச்சி மிகுந்த பேச்சு ரசிகர்களை கண்கலங்க வைத்தது...!
Sivakarthikeyans touching words His emotional speech left audience awe
சென்னையில் நேற்று FANLY எனும் புதிய செயலியின் பிரமாண்ட வெளியீட்டு விழா நடைபெற்று, ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த விழாவில் முன்னாள் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் புல்லேலா கோபிச்சந்த், தொழில்நுட்ப நிபுணர்கள் லட்சுமி நாராயணன், குகேஷ் தம்மராஜு, மணிகண்டன் தங்கரத்தினம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அந்த விழாவின் முக்கிய தருணத்தில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் புதிய செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தார்.அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் குறிப்பிட்டதாவது,"என் ரசிகர்கள் எனக்கு வெறும் ரசிகர்கள் அல்ல; அவர்கள் என் சகோதர, சகோதரிகள். என் நீட்டிக்குடும்பம்.
என்னை வணங்குவது எனக்கு பிடிப்பதில்லை. வணங்க வேண்டியது கடவுளையும், பெற்றோரையும் மட்டுமே.இன்றைய சமூக சூழலில் எதிர்மறை செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. அதைத் தாண்டி நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
என்னுடன் நண்பர்கள் போல, சகோதரர்கள் போல இணைந்திருக்கும் ரசிகர்களைத் தான் நான் விரும்புகிறேன்.சமூக வலைத்தளங்கள் தரும் தேவையற்ற தகவல்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதில் நான் இருந்தாலும், பெரும்பாலானவற்றை நான் நேரடியாக பயன்படுத்துவதில்லை,அதற்கென குழுவே இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் மட்டும் பயன்படுத்தி வந்தேன். ஆனால் தவறுதலாக ஏதாவது ரீபோஸ்ட் செய்து விடுவேனோ என்ற பயமும், அங்குள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகமும் காரணமாக இப்போது அதையும் பயன்படுத்தாமல் இருக்கிறேன்.
FANLY செயலியின் தளத்தில் இணைந்த முதல் திரை நட்சத்திரமாக சிவகார்த்திகேயன் பெயரைப் பதித்து, இந்த தொழில்நுட்ப முயற்சிக்கு புதிய துவக்கத்தை வழங்கினார்.
English Summary
Sivakarthikeyans touching words His emotional speech left audience awe