மேக்கப் இல்லாமல் பேட்டி கொடுத்த அஜித் – அனுபாமா சோப்ரா பகிர்வு!
Anupama dubai interview ajithkumar
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார், அண்மையில் 'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' பத்திரிகைக்கு அளித்தப் பேட்டி குறித்த சுவாரஸ்யமான அனுபவத்தை, அவரை நேர்காணல் செய்த பிரபல பத்திரிகையாளர் அனுபமா சோப்ரா பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நேர்காணல் அனுபவம்
வேறொரு நேர்காணலின்போது அஜித்தின் பேட்டி குறித்துப் பேசிய அனுபமா சோப்ரா, "துபாயில் அஜித்திடம் நேர்காணல் எடுத்தேன். அவர் அங்கு தனியாகவே வந்தார்" என்று குறிப்பிட்டார்.
அஜித்தின் எளிமை தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக அவர் கூறினார்:
மேக்கப் இல்லை: "நான் என்னுடன் ஒப்பனையாளரை (Makeup Artist) அழைத்துச் சென்றிருந்தேன். ஆனால், அஜித் சிறிதும் மேக்கப் செய்து கொள்ளவே இல்லை. அவர் ஒரு சூப்பர்ஸ்டார். அவரது இந்தச் செயல் எனக்குச் சங்கடமாக (Guilt) இருந்தது."
எளிமை: "மேலும், அவர் மற்றவர்களுக்கு (சக ஊழியர்களுக்கு) அறையின் கதவைத் தானே திறந்துவிடுகிறார். அவரது எளிமையைக் கண்டு நான் கூச்சப்பட்டேன்," என்று அனுபாமா சோப்ரா தெரிவித்துள்ளார்.
அஜித்தின் இந்த நேர்காணல் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வைரலான நிலையில், தற்போது அனுபமா சோப்ராவின் இந்த அனுபவப் பகிர்வு ரசிகர்களிடையே மேலும் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
Anupama dubai interview ajithkumar