யூடியுப் தளத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த திமுகவின் புதிய பிரச்சாரப் பாடல்..! - Seithipunal
Seithipunal


திமுகவின் பிரச்சாரப் பாடல் சமூக வலைதளங்களில் 'ட்ரெண்ட்' ஆகி வருகிறது. யூடியுப் தளத்தில் கடந்த 04 நாட்களில் 01 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திமுக 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற பாடலைக் கடந்த வாரம் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் வெளியிட்டது. 

 கடந்த 2021 தேர்தலில் திமுகவின் பிரச்சார பாடலான 'ஸ்டாலின் தான் வர்றாரு' என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. அதேப்போன்று வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காகவும் புதிய பாடல் வெளியிடப்பட்டது. 

இந்த பாடலில் தமிழ்நாட்டுக்கு திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்ற இலக்குடன் தீவிரப் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். 

மேடைகள் தோறும்  ஒலித்துக்கொண்டிருக்கிற இந்த பாடலை திமுகவினர் தங்களது மொபைல் போனில் ரிங் டோனாகவும் வைக்கத் தொடங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMKs new campaign song crosses one crore views on YouTube


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->