திமுகவின் வரலாற்று வீழ்ச்சி: தலைவர்களின் சரிவும் ஒரு சகாப்தத்தின் முடிவும்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் வரலாற்றில் திமுக எத்தனையோ சவால்களையும் தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளரும் ஒரே நேரத்தில் தங்களின் தொகுதிகளில் தோல்வியைத் தழுவுவது என்பது இதுவரை நிகழ்ந்திராத ஒரு அதிர்ச்சிகரமான வரலாற்றுச் சம்பவமாகும்.

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாபெரும் எழுச்சியுடனும், மக்கள் ஆதரவுடனும் ஆட்சியைப் பிடித்த மு.க. ஸ்டாலின், வெறும் ஐந்தே ஆண்டுகளில் இத்தகையதொரு சரிவைச் சந்திப்பார் என அரசியல் நோக்கர்கள் கூடக் கணிக்கவில்லை.

இந்தத் தோல்விக்கான முக்கியக் காரணமாக, ஆட்சியின் அதிகார மையங்களாக இருந்த சில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் மீதான அதீத நம்பிக்கை சுட்டிக்காட்டப்படுகிறது. "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்" என்ற திருக்குறளின் ஆழமான பொருளுக்கேற்ப, அரசன் தவறு செய்யும்போது இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் அமைச்சர்கள் இல்லையெனில், பகைவர்கள் இல்லாமலே அந்த ஆட்சி வீழும் என்பதற்கு இந்த 2026 தேர்தல் முடிவுகள் சான்றாகியுள்ளன.

தவெக-வின் ‘விசில் அலை’ மாநிலம் முழுவதும் வீசிய சூழலில், அமைச்சர்களின் தவறான ஆலோசனைகளும், மக்கள் குறைகளைக் கவனிக்கத் தவறியதுமே 2021-ன் பிரம்மாண்ட வெற்றியை 2026-ன் படுதோல்வியாக மாற்றியுள்ளது.

கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினும், காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் சந்தித்த இந்த வீழ்ச்சி, திமுக வாழ்நாள் அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றத்தையும், புதிய விடியலுக்கான தேவையையும் உறுதிப்படுத்தியுள்ளது. இனியாவது வாரிசு அரசியல், குறுநில மன்னர்களை (அமைச்சர்கள்) உருவாகாமல், உருவாகாமல் இருப்பது திமுகவிற்கு நல்லது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMKs Historic Downfall The Fall of Its Giants and the End of an Era


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->