ஸ்.... ஆ., ஆ., அரை நிர்வாணத்துடன் ஆபாச ஆட்டம் காட்டும் திமுக.! பெண்ணை போதை பொருளாய் காட்சிப்படுத்திய பெரியார் மண்.!  - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழகத்தால் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்து, ஆபாசமான உடல் அசைவுகளுடன், ஆபாசப் குத்துப்பாட்டுக்கு நடனமாடும் காணொளிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த காணொளியில், நடுத்தெரு ஓரமாய் குட்டை பாவாடை மற்றும் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு 2 இளம்பெண்கள் திமுகவின் மேடையில் ஆடுவது கேலிக்கூத்தாக உள்ளது. 

பார்ப்பவர்கள் கண்கள் கூசும் அளவிற்கு, ஆபாசம் உச்சகட்டத்தில் பிறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் கலாச்சாரம் தமிழ் என்ற ஒரு கலாச்சாரம் உள்ளது. 

மேலும் பெண்ணுரிமை, பெண்ணடிமைத்தனத்தை பற்றி மார்தட்டிக் பேசிக்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி குட்டை பாவாடை, ஜாக்கெட்டுடன் பெண்களை ஆபாச நடனம் ஆட வைத்திருப்பது அக்கட்சியின் கொளகையான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது, அரை நிர்வாணம், ஆபாசம், ஆட்டம் என்பதாக மாறிவிட்டதோ என்று பலரும் தங்களது கேள்வியை முன்வைக்கின்றனர்.

இதுதான் அண்ணா சொல்லிய கண்ணியமா? திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இது அவமானகரமான விஷயம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

எதிர் கட்சியாக இருந்தால் கூட மக்களை தங்கள் பக்கம் திருப்ப ஆபாசத்தை கையில் எடுத்தார்கள் என்று சொல்லலாம், ஆனால் தற்போது தமிழகத்தில் ஒரு ஆளும் கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம் இதுபோன்ற ஒரு ஆபாச நடனத்தை அரங்கேற்றியது மிகப் பெரிய அசிங்கம், அவமானம் என்று சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதெல்லாம் திமுக தலைவருக்கு தெரிந்துதான் நடக்கிறதா? அமைச்சர் பெருமக்களுக்கு இது தெரியாமலா இருக்கும் என்ற சந்தேகம் இயல்பாகவே மக்கள் மத்தியில் எழுகிறது. இனிவரும் காலங்களில் திமுக கண்ணியதோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. 

பெண்ணை போதை பொருளாக ஆபாச நடனம் ஆடவைத்து, நடந்த இந்த ஆபாச கூத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும், திமுக மனம் திருந்தினால் நல்லது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk worst program


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->