180க்கும் மேல் திமுக வெற்றி? கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்'!லோக் போல் கருத்துக்கணிப்பு - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு லோக் போல் (Lok Poll) நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும், அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலமும் இந்த முறை திமுக வசமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் சுமார் 1,17,000 பேரிடம் கருத்து கேட்டு இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வெளியான கணிப்பில், திமுக கூட்டணி மொத்தம் 181 முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி 38 முதல் 42 இடங்களிலும் மட்டுமே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 8 முதல் 10 இடங்களும், நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடமும் கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

மண்டல வாரியான கணிப்பில், அதிமுகவின் பலமான பகுதியாக இருந்த மேற்கு (கொங்கு) மண்டலத்தில் கூட திமுக முன்னிலை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் திமுக கூட்டணி 44 முதல் 46 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதிமுக 9 முதல் 10 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்தில் திமுக 53 முதல் 56 இடங்களிலும், அதிமுக 11 முதல் 12 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் திமுக 39 முதல் 40 இடங்களிலும், அதிமுக 9 முதல் 10 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தெற்கு மண்டலத்திலும் திமுக கூட்டணி 45 முதல் 47 இடங்களை கைப்பற்றும் என்றும், அதிமுக 9 முதல் 10 இடங்களிலும் மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 2026 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் இறுதி முடிவு மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே தெளிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK wins over 180 AIADMK stronghold breaks in Kongu DMK is top in all 4 zones Lokpol opinion poll


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->