தாழ்த்தப்பட்டோருக்கு தனி கிளை., திமுகவில் தாண்டவமாடும் தீண்டாமை.!  - Seithipunal
Seithipunal


திமுகவின் அமைப்பு செயலாளராக இருக்கும் ஆர் எஸ் பாரதி சமீபத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதியாக பதவி வகிப்பது குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர் எஸ் பாரதி தாழ்த்தப்பட்ட மக்களை மிக தவறான கண்ணோட்டத்தில் பேசியதாக அதிமுக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. 

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட நிர்வாகி வைரமணி திமுகவிற்கு ஆதரவாக 80 சதவீத தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கின்றனர். 

இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் சுயமரியாதையோடு வாழ காரணமே திமுக தான். எனவே தாழ்த்தப்பட்டோருக்கு தனி கிளையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றார். ஏற்கனவே ஆர்எஸ் பாரதியின் பேச்சு சர்ச்சையாகி இருக்கும் நிலையில், திமுக நிர்வாகியின் பேச்சும் அதை மிகைப்படுத்தும் விதமாக இருக்கின்றது. 

அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி உரிமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், திமுக தான் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு காரணம் என்று அடிக்கடி சொல்லிக் காட்டிக் கொண்டு இருப்பது திமுகவின் கூட்டணியில் இருக்கும் தலித் கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன தான் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை எங்களால் தான் கிடைத்தது என்று கூறி கொண்டு இருந்தாலும் கூட, திமுகவிற்கு உள்ளேயே பல தீண்டாமை சம்பவங்கள் நடைபெறுவதாக அவ்வப்போது திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk trichy district secretory speech issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->