" கொள்ளைக்கூட்டத்தை வீழ்த்துவதே நமது கடமை " - மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற " தமிழகம் மீட்போம் " என்று தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், " தமிழகத்தில் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துவிட்டது. வேலைவாய்ப்புகள் என்பது இல்லை. மாநில உரிமைகள் அனைத்தும் பறிபோய்விட்டது. வேளாண்மை மொத்தமாக சிதைந்துவிட்டது. 

தமிழகத்தை நாசம் செய்யும் திட்டங்களை நம்மிடையே திணித்து வருகின்றனர். நாம் எதிர்பார்க்கும் திட்டங்கள் எதையும் செயல்படுத்துவதே இல்லை. தமிழகத்திற்கு இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை. மக்களை ஏமாற்ற எய்ம்ஸ்க்கு குழு ஒன்றை அறிவித்தனர். அதில் எம்.பிக்கள் யாருமே இல்லை. இதனை தட்டிக்கேட்க அதிமுகவிற்கு தைரியம் இல்லை. இக்கூட்டத்தை வீழ்த்துவதே நமது கடமை.

தேர்தல் உலைக்களத்தில் படைக்கலனாக நாம் இருக்க வேண்டும். கோட்டையில் திமுக ஆட்சி நடைபெற இக்கூட்டத்தில் உறுதியேற்போம். கேரளா மாநில அரசு கொண்டு வந்துள்ள காய்கறிகள் அடிப்படை விலை நிர்ணய சட்டத்தை போல தமிழகத்தில் முதல்வர் கொண்டு வர வேண்டும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Stalin Speech at Pudukkottai Meeting 2 November 2020


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->