திமுகவை ஒருபோதும் யாராலும் வீழ்த்த முடியாது - செந்தில் பாலாஜி
DMK Senthilbalaji BJP TVK
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்காகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தேவையான நிதியை ஒதுக்கி கோவையின் வளர்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி வருவதாகவும், அவர் அறிவிக்கும் வேட்பாளர்கள் கோவையில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசைக் குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் தங்கள் எண்ணங்கள் நிறைவேறாது என்பதைத் தெரிந்துகொண்டு, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் மூலம் தங்களது முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். ஆனால், திராவிட மாடல் ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் மகத்தான வெற்றியை அளித்ததைப் போல, அது சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்று அவர் கூறினார். மேலும், முகவரி மாறியவர்கள் அல்லது உயிரிழந்தோரின் பெயர்களை நீக்குவது தேர்தல் ஆணையத்தின் பணி என்றும், அவர்களைப் போலி வாக்காளர்கள் எனக் கூறுவது தவறு என்றும் தெரிவித்தார்.
திமுகவை ஒருபோதும் யாராலும் வீழ்த்த முடியாது என்றும், தொடர்ந்து 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் என்றும் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார்.
English Summary
DMK Senthilbalaji BJP TVK